தமிழ்நாடு

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

த. பார்த்திபன்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு காவிரி நீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியிலிருந்து உரிய நீரை திறந்து விட வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்கள், அவர்களது சொத்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர். ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர். கோவிந்தராஜ், செயலர் இ. மேரி ஜமீலா வெற்றிக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT