ஹவுரா, சாந்திரகாச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்கள்
ஈரோட்டில் இருந்து சென்னை எழும்பூருக்கும், சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கும், புதுச்சேரியில் இருந்து சாந்த்ராகாச்சிக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: ஈரோட்டில் இருந்து சென்னை எழும்பூருக்கும், சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கும், புதுச்சேரியில் இருந்து சாந்த்ராகாச்சிக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் ரயில் எண் 06027: செப்டம்பர் 23,25,27,28,30 மற்றும் அக்டோபர் 2,3,4,7,9,10,11,12,14 தேதிகளில் ஈரோட்டில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06028: செப்டம்பர் 23,25,26,27,28,30 மற்றும் அக்டோபர் 2,3,4,5,7,910,11,12,14 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
Advertisement
இந்த ரயில் சங்ககிரி, சேலம், சேலம் டவுன், ஆத்தூர், சின்ன சேலம், விருதாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்.
சென்னை சென்ட்ரல் - ஹவுரா ஏசி அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில்
ரயில் எண் 00842: அக்டோபர் 9,16,23,30 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
இந்த ரயில் நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புபனேஷ்வர், கட்டக், பாத்ராக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
புதுச்சேரி - சாந்த்ராகாச்சி சிறப்பு கட்டண ரயில் (வழி: எழும்பூர்)
ரயில் எண் 06010: அக்டோபர் 22,29 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் இருந்து சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு சாந்த்ராகாச்சிக்கு திங்கள்கிழமை காலை 4.30 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, எலுரு, தாதேபள்ளிக்குடம், ராஜமுந்தரி, சாமல்கோட், துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் சாலை, பாலசா, பிரம்மபூர், குர்தா சாலை, புபனேஷ்வர், கட்டக், பாத்ரக், பாலசூர், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.