தமிழ்நாடு

குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

DIN

குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், அதையொட்டி 500 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த மதுக்கடைகளை தமிழக அரசு மூடியிருக்கிறது. ஆனால், மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் அரசின் திட்டத்தை மக்கள் நினைத்தால் எளிதாக முறியடிக்க முடியும். மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை வாடகைக்கு எடுத்துத்தான் அரசு இந்தக் கடைகளை திறக்க முடியும்.
மதுக்கடைகளை திறக்க வாடகைக்கு இடம் கொடுக்க நினைப்பவர்கள் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கும் கேடு என்ற வாசகத்தை தங்கள் மனதில் ஒருமுறை உச்சரித்துப் பார்த்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்து முடிவெடுக்க வேண்டும்.
வாடகைக்கு ஆசைப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுத்தால், அந்த வழியாகச் செல்லும் மக்கள் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்து புதிய மதுக்கடைக்கு இடம் தருவதை சமூகப் பொறுப்புள்ள மக்கள் தவிர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT