முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் மாணவர்கள் 'திடீர்' போராட்டம்! 

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:12 PM
பகிர்:

சென்னை: தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தினைச் சேர்ந்த மாணவர்கள் 'திடீர்' போராட்டம் நடத்தி கைதானார்கள்.

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் அமைப்பினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அநத வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் சிக்னல் அருகே அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இன்று காலை 'திடீர்' போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் இருக்க வைத்தனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அண்ணா சாலையியில் சில மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →