தமிழ்நாடு

சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்

DIN

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடுவதற்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்திய சிவனடியார் உ.ஆறுமுகசாமி (94), சனிக்கிழமை காலமானார்.
அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கடலூரில் தனது மகள் திலகவதி வீட்டில் தங்கியிருந்த இவர், மதியம் ஒரு மணியளவில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான, சிதம்பரம் அருகேயுள்ள குமுடிமூலை கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஆறுமுகசாமியின் மனைவி நாகலெட்சுமி. இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்கள். இவர்களில் 4 மகன்கள் ஏற்கெனவே இறந்துவிட்டனர்.
நடராஜர் கோயிலில் தேவாரம் பாடுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த இவர், பின்னர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, கனகசபை மீது ஏறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேவாரம் பாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT