தமிழ்நாடு

6 இடங்களில் சதம்: வெப்பம் மேலும் அதிகரிக்கும்

DIN

தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோடைக்காலம் என்பதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள்மாவட்டங்களில் வெயில் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. கடற்காற்று நிலப்பரப்புக்குள் நுழைவதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 30 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, திருநெல்வேலி, தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தலா 10 மீ.மீ. மழையும் பெய்துள்ளது.
வானிலை குறித்து சென்னை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: அந்தமான் மற்றும் வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இதுமேலும் நகர்ந்து வடகிழக்குத் திசையில் மியான்மரை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் உள்ள ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இயல்பு வெப்பநிலையைக் காட்டிலும் 1 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.
சனிக்கிழமையைப் பொருத்தவரை வெப்பச்சலனத்தினால் ஏற்படும் இடிமேகங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றனர்.
6 இடங்களில் சதம்: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகப் பதிவாகியுள்ளது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):

சேலம், கரூர் பரமத்தி 103
திருச்சி, மதுரை, தருமபுரி 102
பாளையங்கோட்டை 100
கோவை 99
சென்னை 92

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT