தமிழ்நாடு

நாகப்பட்டினத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

DIN

நாகப்பட்டினம்: நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதையடுத்து, நாகப்பட்டினத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேலும் வலுப்பெற்று, புயலாக உருவாகியுள்ளது. மாருதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மியான்மர் நோக்கி நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் நாகை துறைமுக அலுவலகத்தில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT