தமிழ்நாடு

நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க சென்ற கோவை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 15 நாட்கள் காவல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக போராட நெடுவாசல் சென்ற  இரு மாணவிகள் உள்ளிட்ட 7 பேரையும் 15 நாள் காவலில் வைக்குமாறு கரூர்

DIN

கரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக போராட நெடுவாசல் சென்ற  இரு மாணவிகள் உள்ளிட்ட 7 பேரையும் 15 நாள் காவலில் வைக்குமாறு கரூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவி வளர்மதி(23),மாணவர் தீபக்(23) உள்பட 7 பேர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் ஹைட்ரோ கார்பன் போராட்டத்தில் பங்கேற்க கோவையில் பாலக்காடு விரைவு ரயிலில் சனிக்கிழமை திருச்சி புறப்பட்டனர்.

இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் குளித்தலை ரயில் நிலையத்தை சென்றடைந்தப்போது கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிபபாளர் தங்கதுரை, குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் தலைமையில் குளித்தலை போலீஸார் இரு மாணவிகள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

பின்னர் அன்று இரவே கரூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் -2-ல் நீதிபதி ரேவதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நீதிபதி ரேவதி கைதான 7 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT