முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் காவல்துறையில் ஆஜராக அவகாசம் கேட்டு டிடிவி தினகரன் கோரிக்கை

இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக டிடிவி தினகரன் 3 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக டிடிவி தினகரனுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்யத தில்லி போலீஸார், அவரிடம் 1.3 கோடி ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த தில்லி குற்றப்பிரிவு காவல்துறை முடிவுசெய்தது.  

இது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்த தில்லி குற்றப்பிரிவு காவல்துறையில் வரும் சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என சென்னைக்கு நேரில் வந்து அவரிடம் சம்மன் அளித்தனர்.

இதன்படி தில்லி குற்றப்பிரிவு போலீஸார் முன்பு டிடிவி தினகரன் நாளை ஆஜராக வேண்டும்.

இந்நிலையில், நேரில் ஆஜர் ஆக டிடிவி தினகரன் தரப்பில் 3 நாள் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →