தமிழ்நாடு

திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்

DIN

திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான என்.கே.விஸ்வநாதன்(75) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

'சட்டம் என் கையில்', 'கல்யாணராமன், உரிமை', 'காவியத் தலைவன்', 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக இவர் பணிபுரிந்துள்ளார். ராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான படங்களில் 80-க்கும் மேற்பட்ட படங்களுக்கு விஸ்வநாதன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். 'பெரிய வீட்டு பண்ணைக்காரன்' படத்தின் மூலம் இயக்குநரானார். அதைத் தொடர்ந்து 'இணைந்த கைகள்', 'நாடோடி பாட்டுக்காரன்', 'பெரிய மருது', 'ஜெகன்மோகினி' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாமனூர். ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT