தமிழ்நாடு

ஆட்சியர்களின் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தினமணி

விவசாயிகள் மரணம் தொடர்பாக ஆட்சியர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பொதுமக்களுக்கு போதுமான அளைவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகின்றன. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிலமில்லாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சட்டத்தில் இடமில்லை.

விவசாயிகள் மரணம் பற்றி ஆட்சியர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தந்தனர். ஆட்சியர்களின் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மின்பொருட்கள் பழுதால்தான் மின்சாரம் தடைபடுகிறது. தமிழகத்தில மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. டாஸ்மாக் கடைகளுக்காக சாலையில் பெயர்கள் மாற்றப்படவில்லை. மூடப்படும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். 

சேலம் உருக்காலை விவகாரத்தில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அரசு விரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கியிருந்த கேப்புகள் எல்லாம் செயல் படுத்தப்பட்டுள்ளன. மருத்துவர்கள் போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT