தமிழ்நாடு

இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது பாகுபலி-2: அதிர்ச்சியில் படக்குழுவினர்

DIN

சென்னை: ’பாகுபலி -2’ முழு தமிழ் திரைப்படமும் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானதால் தயாரிப்பாளரும் படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாகுபலி 2-ம் பாகம் திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், படத்தின் முழுபடமும் நேற்று இரவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல தடைகள், எதிர்ப்புக்களை தாண்டி இப்படம் இன்று (ஏப் 28) ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீசானது. தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் பாகுபலி 2-ம் பாகம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இடையேயான பிரச்னை காரணமாக தமிழில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பணப்பிரச்னை காரணமாக சிறப்பு ரகாட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கிடையே  நடந்துவந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவை ஏற்பட்டதை அடுத்து பாகுபலி -2 திரைப்படத்தின் தமிழ் பதிப்பு காலை 11 மணிக்கு வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT