தமிழ்நாடு

கீழடி அகழ்வாராய்ச்சிக்கான நிதி தொடர்ந்து வழங்கப்படும்: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

DIN


கீழடி: கீழடி அகழ்வாராய்ச்சிக்கான நிதி தொடர்ந்து வழங்கப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சிகளை நேரில் ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு, மக்கள் தேசம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த மகேஷ் சர்மா, இப்பகுதியில் கண்டெடுக்கப்படும் பொருட்களை வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். திட்டமிட்டபடியே மேலும் 3 ஆண்டுகளுக்குள் கீழடியில் ஆராய்ச்சி தொடரும். கீழடி அகழ்வாராய்ச்சிக்கான நிதி தொடர்ந்து வழங்கப்படும்.

கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்சிகளின் மூலம் கி.மு. 2ம் நூற்றாண்டில் நாகரிகம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மத்திய அரசுக்கு தமிழகம் மற்றும் தமிழ் மீது மிகுந்த அக்கறை உள்ளது. புதிய தொல்லியல் துறை இயக்குநர் ஸ்ரீராமனும் தமிழகத்தைச் சேர்ந்தவரே. கீழடியில் 2 ஆண்டுகள் வரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT