தமிழ்நாடு

கீழடியில் மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்ட மக்கள்

DIN


கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில், தொல்லியல் ஆய்வுகள் நடப்பதை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு முழக்கமிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மத்தி அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உண்டானது.

தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சிதாராமன், மகேஷ் சர்மா ஆகியோர் பார்வையிட வந்தனர்.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத்தை மாற்றியதைக் கண்டித்தும் மக்கள் தேசம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சர்களை அப்பகுதிக்குள் அனுமதிக்காமல் மதிர்ப்பு தெரிவத்தவர்கள் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை விரைந்து வந்தார்.

காவல்துறையினரும் சம்பவ இடத்தில் மோதல் போக்கைத் தடுத்தனர். பிறகு, மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT