தமிழ்நாடு

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிப்பு

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலியில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.

மாதத்திற்கு 26 நாட்கள் பணி வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21-வது நாளாக என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி மந்தாங்குப்பத்தில் உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.

எ.ஐ.சி.யு.டி மாவட்ட பொதுச்செயலர் எம்.சேகர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், இவர்கள் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் அல்லது தங்களிடம் இருந்த ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவினை மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) சந்திரசேகரிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதால் ஒப்பந்த தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?- எஸ்.பி. வேலுமணி விளக்கம்

SCROLL FOR NEXT