தமிழ்நாடு

நடிகர் தனுஷ் குடும்பத்தினர் கேரவன் வாகனத்துக்கு மின்சாரம் திருட்டு: ரூ. 15,731 அபராதம் விதிப்பு

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வியாழக்கிழமை வந்த நடிகர் தனுஷ் குடும்பத்தினருக்காக கொண்டு வரப்பட்ட கேரவன் வாகனத்திற்கு முறைகேடாக மின்சாரம் எடுத்ததாகக் கூறி, மின் வாரியத்தினர் ரூ. 15,731 அபராதம் விதித்தனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், தேனி மாவட்டத்திற்கு புதன்கிழமை வந்தார். போடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நல உதவிகளை அவர் வழங்கினார். தொடர்ந்து, வியாழக்கிழமை ஆண்டிபட்டி, முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வத்தின் கோயிலான கஸ்தூரி அங்கம்மாள் கோயிலில் வழிபாடு செய்ய தனது தாய், தந்தை மற்றும் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருடன் காரில் வந்தார் நடிகர் தனுஷ்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ஒய்வெடுப்பதற்காக கேரவன் வாகனம் ஒன்று அவர்கள் வருவதற்கு முன்னர் ஆண்டிபட்டிக்கு வந்துள்ளது. இந்த வேனில் உள்ள குளிர்சாதன இயந்திரத்திற்காக, அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து முறைகேடாக மின்சாரம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை அருகில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், இதை அலட்சியம் செய்துவிட்டு, தொடர்ந்து மின்சாரம் எடுத்துள்ளனர். இதையடுத்து, மின்வாரியத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, கேரவன் வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். பின்னர் முறைகேடாக கேரவன் வாகனத்திற்கு மின்சாரம் எடுத்ததாகக் கூறி, ரூ. 15,731 அபராதம் விதித்தனர். இந்த தொகையை கட்டிய பின்னரே வாகனம் விடுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT