சென்னை: அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரனை முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விஜயதரணி கூறியுள்ளார்.
சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி சந்தித்துப் பேசினார்.
தினகரனை சந்தித்துப் பேசிய விஜயதரணி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியை வழிநடத்தும் தலைமையாக தினகரன் விளங்குவார். தினகரனை முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சந்திக்க வேண்டும். தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தினகரனை சந்தித்து பேசியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. அவரது மாமியார் சந்தானலெட்சுமி அம்மையார் மறைவையொட்டி துக்கம் விசாரித்தேன்.
அதிமுகவை வளர்க்க தினகரன் எடுக்கும் முயற்சிகளுக்கு அவரை பாராட்டுகிறேன். பாஜக செயலை கண்டிக்காவிட்டால் அதிமுக நிலைக்காது. அதிமுகவின் சுதந்திரத்தை பாஜக பறித்துள்ளது என்றும் விஜயதரணி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.