தமிழ்நாடு

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

DIN

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறைக்கு வேறு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என்பதை தில்லியில் பேட்டியளித்த சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதி பொய் என்பது இந்தப் பேட்டி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து பீதியடைந்துள்ளனர்.
எனவே, சுகாதாரத் துறைக்கு வேறு அமைச்சரை நியமிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வரே முன்னின்று, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பாதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT