தமிழ்நாடு

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்யக் கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட 108 விவசாயிகள் மீது சனிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்கலம், விளக்குடி, மேட்டுப்பாளையம், கீரக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், 2016-17-ஆம் ஆண்டிற்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 1544 விவசாயிகள் பிரீமியம் தொகை செலுத்தி இருந்தனர்.
இதில் அரசு அறிவித்த இழப்பீட்டுத்தொகை 80 சதவிகிதம் 1238 விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
கொத்தமங்கலம் மற்றும் விளக்குடி பகுதியைச் சேர்ந்த 306 விவசாயிகளுக்கு குறைவான பணமே வங்கிக் கணக்கில்
வந்துள்ளது தெரியவந்ததையடுத்து அரசு அறிவித்த முழு காப்பீட்டுத்தொகையையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
இதில் காவிரி விவசாயிகள் சங்க விளக்குடி கிளைத் தலைவர் விவேகானந்தன் மற்றும் விளக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் (50), கருணாநிதி (58), சண்முகம்(47), செல்வம்(45) உள்ளிட்ட 108 விவசாயிகள் மீது திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT