தமிழ்நாடு

ரஜினி, கமல் மக்களுக்கு என்ன செய்தார்கள்?: அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவலையில்லை என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி, கமல் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என

DIN

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவலையில்லை என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி, கமல் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவலையில்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு எம்ஜிஆர் உதவி செய்தார்; ரஜினி மற்றும் கமல் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. ரஜினி, கமல் போன்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.

நடிகர்களான சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் கடை ஆரம்பித்து ஏற்பட்ட நிலைமையை, அரசியலுக்கு வர நினைக்கும் ரஜினி, கமல் அறிய வேண்டும். தமிழக மக்கள் துன்பப்படும்போது நடிகர்களான ரஜினி, கமல் என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.  

மேலும், தற்போது தமிழக அரசியல் நிலைமை நன்றாக உள்ளது, முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT