தமிழ்நாடு

நகரில் குற்றத் தடுப்பில் போலீஸார் ஈடுபடுகிறார்களா என இரு சக்கர வாகனத்தில் புதுவை ஆளுநர் கிரண்பேடி இரவு நேர சோதனை

தினமணி

புதுவை நகரில் குற்றத் தடுப்பில் போலீஸார் ஈடுபடுகிறார்களா என இரு சக்கர வாகனத்தில் சென்று ஆளுநர் கிரண்பேடி வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனை மேற்கொண்டார்.

புதுச்சேரியை பாதுகாப்பான, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை கிரண்பேடி எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். பீட் ஆபிசர் எனப்படும் ரோந்து முறை, சைக்கிளில் சென்று ரோந்து மேற்கொள்ளுதல் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாரந்தோறும் ஆளுநர் கிரண்பேடி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆளுநர் மாளிகை கட்டுப்பாட்டு அதிகாரி ஆஷா குப்தாவுடன் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து புதுவை நகரின் முக்கிய பகுதிகளில் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக செல்ல முடிகிறதா என சோதனை செய்தார். பஸ் நிலையம், கடற்கரை சாலை, முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று போலீஸார் இரவு நேர ரோந்தில் ஈடுபடுகின்றனரா, சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

பொதுமக்கள் ஏதாவது அவசரம் என்றால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தயங்காமல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆளுநர் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று அதிரடி சோதனை செய்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT