தமிழ்நாடு

பன்னீர்செல்வம் அணியின் எந்த நிபந்தனையும் எங்களை கட்டுப்படுத்த முடியாது: நாஞ்சில் சம்பத்

கட்சியை இணைக்கிறோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் கேலிக்கூத்து நடத்துகிறார்கள் என சென்னையில் உள்ள தினகரன் இல்லத்தில்  நாஞ்சில் சம்பத்

DIN

சென்னை: கட்சியை இணைக்கிறோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் கேலிக்கூத்து நடத்துகிறார்கள் என சென்னையில் உள்ள தினகரன் இல்லத்தில்  நாஞ்சில் சம்பத் கூறினார்.

தொண்டர்கள் உள்பட அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் இரு அணிகளின் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இணைப்பு சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை. இரு அணிகளின் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியை இணைக்கிறோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் கேலிக்கூத்து நடத்துகிறார்கள்

தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தால், அணிகள் இடையே கடும் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அணிகள் இணைவதற்கு ஓபிஎஸ் அணி தற்போது நிபந்தனை வித்து வருகிறது என்றார்.  

வரும் 23 ஆம் தேதி ஆர்.கே. நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறுகிறது. எந்த அறைகூவலையும் எதிர்கொள்ளும் நிலையில் தினகரன் இருப்பதாவும் தெரிவித்தார்.

மேலும், வடக்கிருந்து உயிர்நீக்கக் போகிறேன் என்கிற முருகனுக்கு முதல்வரின் பதில் என்ன? என நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT