தமிழ்நாடு

டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஜெயலலிதா நினைவிடம் வருகை

டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்றனர் .

DIN

அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் இரு அணிகளும் திங்கட்கிழமை இணைந்தன.

இதையடுத்து தமிழக அமைச்சரவைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராக பதவியேற்றார்.

மேலும், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகவும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.

அதுமட்டுமல்லாமல் சசிகலா குடும்பம் அதிமுக-வில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரும் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT