தமிழ்நாடு

எங்களை ஒதுக்குவது ஏன்? சி.ஆர்.சரஸ்வதி கேள்வி

இரண்டு அணிகளும் இணைந்ததில் மகிழ்ச்சி. ஆனால், தினகரன் தரப்பை ஏன் ஒதுக்க வேண்டும் என சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பினார்.

DIN

அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய அணிகள் திங்கட்கிழமை இணைந்தன. இதையடுத்து தமிழகத்தின் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

மேலும், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகவும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.

இந்நிலையில், டிடிவி.தினகரன் அணியைச் சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் கூறியாதவது:

இரண்டு தரப்பும் இணைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் விரும்பினோம். ஆனால், எங்களை ஏன் ஒதுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. 

சிறை செல்லும் முன்பு சசிகலா தான் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக முதல்வராக்கினார். ஆனால், இப்போது இருவரும் எங்களை நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காலம் அனைத்துக்கும் பதில் கூறும். மக்கள் எங்களுடன் தான் உள்ளனர். 

கூடிய விரைவில் ஒட்டுமொத்த அதிமுக-வையும் இணைக்க அவர்கள் எங்களிடம் தான் வந்தாக வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் டிடிவி.தினகரனின் கோரிக்கையாகவும் இருந்தது. அவரும் அதைத்தான் விரும்பினார். தற்போது அவரையே ஒதுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT