தமிழ்நாடு

முதல்வரை எப்படி மாற்றுகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: தங்க தமிழ்ச்செல்வன் 'தில்' பேட்டி! 

DIN

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்படி பதவியில் இருந்து மாற்றுகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்,ஏவான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்,ஏக்கள் 19 பேர் இன்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநரை சந்தித்தனர். அப்பொழுது அவரிடம்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்கள்  நம்பிக்கை இழந்து விட்டதாகவும், எனவே அவரை மாற்ற உதவ வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளனர் இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்,ஏவான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது;

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னால் இந்த கட்சியினை கட்டிக் காத்தவர் சசிகலாதான். அவர் இல்லை என்றால் கட்சியே இல்லை. அவர்தான் அரசுக்கு நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவினைப் பெற்று இந்த ஆட்சி உருவாக காரணமாக அமைந்தார்.

அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்த பொழுது, அரசுக்கு எதிராக வாக்களித்தவர். அத்துடன் கட்சியின் சின்னமான இரட்டைஇலை முடக்கப்பட்டதற்கும் காரணமாக அமைந்தவர். ஆனால் அவரைத் தான் இந்த அமைச்சர்கள் நேரடியாக வீட்டுக்கு சென்று வருந்தி அழைக்கிகின்றனர் 

ஆனால் சசிகலாவை பொதுச் செயலாளார் பதவியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்தது தாங்க முடியாத விஷயம். அதனைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

இந்த அரசு ஊழல் அரசு என்று சொல்லி ஆகஸ்ட் 15 அன்று, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தவர்தான் பன்னீர்செல்வம்.

தற்பொழுது நாங்கள் ஆளுநரை சந்தித்தது முதல்வரை மாற்றும் பாணியில் எம்.எல் ஏக்களான  நாங்கள் ஈடுபட்டுள்ள விவரத்தை தெரியப்படுத்தத்தான். வேறு எந்த விதமான திட்டமும் இல்லை.

எந்த ஆட்சி எப்படி கலைக்கப்படுகிறது  என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்படி பதவியில் இருந்து மாற்றுகிறோம் என்பதையம் பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT