தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: தீபா வேட்புமனு நிராகரிப்பு! 

விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன்  மகள் தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரன் அணி, நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் மற்றும் பாஜக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஆனால் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்ற பொழுது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இன்று மாலை விஷால் வேட்பு மனுபரிசீலனை நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பரிசீலனை துவங்கிய பொழுது ஜெயலலிதாவின் அண்ணண்  மகள் தீபா தாக்கல் செய்த வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டிய படிவம் 26 நிரப்பப்படவிலையென்றும், மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களில் முழுமையில்லை என்பதாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT