தமிழ்நாடு

ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: விஷால் அடுத்த அதிரடி! 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், ஆளுநரைச் சந்தித்து புகார் கொடுக்க நேரம் கேட்டுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், ஆளுநரைச் சந்தித்து புகார் கொடுக்க நேரம் கேட்டுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாயன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடந்த பொழுது, நடிகர் விஷாலின் வேட்பு மனுவானது பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டதாக செவ்வாய் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

எனவே தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நடிகர் விஷால் புதன்கிழமை மாலை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.   

அவரை சந்தித்து விட்டு வந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

எனது வேட்பு மனு பரிசீலனையில் செவ்வாயன்று நடந்த விவகாரங்கள் குறித்து ராஜேஷ் லாக்கனியிடம் எழுத்து பூர்வ புகாராக அளித்துள்ளேன்.  அத்துடன் ஆளுநரையும் சந்தித்து புகார் கொடுக்கும் பொருட்டு நேரம் கேட்டுள்ளேன்.

வேட்பு மனுவில் எனக்கு சொல்லப்பட்டது போல தவறுகளிருப்பதாக தேர்தல் அதிகாரி கருதினால் சட்டபப்டி ஒரு நாள் அவகாசம் அளிக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எனக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.எல்லாவற்றையும் அதிகாரி வேலுசாமி நேரடியாக ஆய்வு செய்த பின்னர்தான் எனது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறினார். ஆனால் பின்னர் இரவு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. நான் தற்பொழுது நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT