தமிழ்நாடு

மாணவிகளுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை தேவை: கனிமொழி

DIN

தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து படிக்க அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 8-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது. ஆனால், தமிழக அரசு 2011 முதல் 2016 வரையிலான பயனாளிகளின் பெயர் பட்டியலை மத்திய அரசு கேட்டும் கொடுக்கவில்லை. இதனால், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் மீண்டும் மத்திய அரசுக்கே திரும்பிச் சென்று விட்டது. 
இப்போது மதுரை உயர்நீதிமன்றம் பயனாளிகளுக்கு உதவித் தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். மாணவிகளுக்கு உதவித் தொகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT