தமிழ்நாடு

போலி மருத்துவர்கள் இருவர் கைது

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூரில் போலி மருத்துவர்கள் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
பாரூரில் போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அசோக்குமார் தலைமையிளான குழு, பாரூரில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பாரூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (48) 10 -ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததும், அதே கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (42) என்பவர் பிளஸ் 2 வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. 
இதையடுத்து இருவரும் பாரூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு,, சிறையில் அடைக்கப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மோடி: ஜெ.பி. நட்டா

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

SCROLL FOR NEXT