தமிழ்நாடு

வலைகளை அறுத்து, இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

DIN

கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை அறுத்தும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் ஆயிரக்கணக்கான மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் 12 நாள்களுக்கு பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் ஒக்கி புயல் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை கடந்த 12 நாள்களாக அனுமதி மறுத்து வந்தது. 
இந்நிலையில், கடல் கொந்தளிப்பு அடங்கி வழக்கமான நிலைமை ஏற்பட்டதையடுத்து திங்கள்கிழமை ராமேசுவரத்தில் இருந்து 560-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதி டோக்கன் பெற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்த மீனவர்களை அச்சுறுத்தியுள்ளனர். 
பின்னர், அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த ஏராளமான படகுகளில் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்துள்ளனர். இதனால் மீன் வலைகளை இழந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை காலை கரைக்கு திரும்பினர். 
12 நாள்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டால் மட்டுமே மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கும் சூழல் ஏற்படும் என மீனவர் சங்கத் தலைவர் சகாயம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT