தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி

இன்பராஜ்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வள்ளி குகையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று காலை வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது, வள்ளி குகை அருகேயுள்ள வெளிபிரகார மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் வெளிபிரகாரத்தில் நின்று கொண்டிருந்த பெண் பக்தர் ஒருவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண் பலியானதைத் தொடர்ந்து கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது.

மேலும், இந்து அறநிலை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT