தமிழ்நாடு

ஆபத்தான நிலையிலேயே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: பிரதாப் ரெட்டி தகவல்

DIN

ஆபத்தான நிலையிலேயே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனைகளின் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார். 
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உறவினர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நோயின் பிடியில் இருந்து மீட்க எங்கள் மருத்துவக் குழுவினர் கடுமையாகப் போராடினர். ஆனால், நோயின் தாக்கம் அதிகரித்ததால் அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.
ஒட்டுமொத்த மக்களின் அன்பைப் பெற்றவரின் உடல்நிலை குறித்து வெளியே தெரியப்படுத்தினால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாவது போன்ற காரணிகளால் அவருக்கு காய்ச்சல் என்று அறிக்கை வெளியிட்டோம். 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்திடம் இருந்து எனக்கு அழைப்பாணை ஏதும் வரவில்லை. ஆனால், எங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT