ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது - ரஜினிகாந்தின் வயதிற்கும் குணத்திற்கும் அரசியல் சரிப்பட்டு வராது. ரஜினி ஒரு வெகுளி, அரசியலுக்கு வர சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. 89 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவே சவாலாக இல்லாத போது டிடிவி எப்படி சவாலாக இருப்பார்.
முன்னதாக, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.