தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் மாணவர்களுக்கு மரியாதை

DIN

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்து வரலாற்று சாதனையாக மாறி வெற்றி படைத்தது.
மதுரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி  சென்னை மெரீனா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய தன்னெழுச்சி போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததுடன் குடும்பத்துடன் கலந்துகொண்டு அறவழி போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். இந்த போராட்டம் ஜனவரி 23-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தலைமை இல்லாமல் இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் உலகமை வியந்து பாராட்டியது.
தமிழக இளைஞர்கள், மாணவர்களின் அறவழி போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவரச சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் அவரச சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பலத்த பாதுகாப்புகளுடன் கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டுப்போட்டியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 916 காளைகள் களத்தில் துள்ளிக்குதிக்க, அதனை அடக்க 721 காளையர்கள் களத்தில் ஈடுப்ட்டுள்ளனர்.
இந்நிலையில், புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் 9-ஆம் தேதி நடக்கிறது. இதற்கான அழைப்பிதழ்கள் தற்போது அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த அழைப்பிதழில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுப்பட்டு பெற்ற வெற்றியை பாராட்டும் விதமாக " தமிழக மாணவ மாணவிகள் மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு போட்டிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கென பிரத்யேக பார்வையர்கள் மாடம் அமைக்கப்படும் என்று அந்த கிராம மக்கள் ஏற்கனவே, அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் பங்குகொள்ளும் காளைகளில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், துள்ளி குதித்து வரும் காளைகளை வீர எழுச்சியுடன் அடக்கும் காளையர்களுக்கும் கார், இருசக்கர வாகனம், சைக்கிள் உள்ளிட்ட ஏரளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT