தமிழ்நாடு

நந்தினி கொலை விவகாரம்: மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

DIN

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில் சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி, அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), ஆதிக்க சமூகத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டன், அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த பிப்.3-ஆம் தேதி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு ஆண்டுக்கு மணிகண்டனால் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது.

இந்நிலையில், இளம்பெண் நந்தினி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிகண்டனை அடுத்து அவரது நெருங்கி நண்பரான மணிவண்ணன் என்பவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT