தமிழ்நாடு

ரூபல்லா தடுப்பூசி முகாம் தொடக்கம்

DIN

தமிழகத்தில் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி திட்ட முகாம் திங்கள்கிழமைதொடங்கியது.
முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் வேளச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியது:-
தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த முகாமில் 50 ஆயிரம் பணியாளர்களும் 12 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களும் பங்கேற்கின்றனர். பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படும். பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில், 9 மாதக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை 1.8 கோடி பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்களின் இடது கை பெருவிரலில் அடையாளத்துக்காக மை வைக்கப்படும்.
காய்ச்சல் அல்லது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், விடுபட்ட குழந்தைகளுக்கும் மார்ச் மாதம் தடுப்பூசி போடப்படும் என்றார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந் தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT