தமிழ்நாடு

இலங்கை வசமுள்ள மீனவர்களை விடுவிக்கவேண்டும்: வி.கே.சசிகலா

DIN

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டது குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இந்த மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து, கடலில் மீன்பிடிக்க இயந்திரப் படகில் சென்றனர். படகில் பழுது ஏற்பட்டதால், நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களைப் பிடித்து சென்றுவிட்டனர். இது சர்வதேச கடல்சார் சட்டங்களுக்குப் புறம்பானது.
தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 119 மீன்பிடி படகுகள் ஏற்கெனவே இலங்கை அரசின் வசம் உள்ளதாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாலும் படகுகளும், அதில் உள்ள சாதனங்களும் சேதமடைந்திருக்கும்.
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களையும், 120 மீன்பிடி படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுத்து, மீனவர் குடும்பங்களின் துயர் துடைக்க வேண்டும். இதன் மூலம் தமிழக மீனவர்களின் இன்னலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். மேலும், பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் அமைதியாகவும், பாதுகாப்புடனும் மீன் பிடிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சசிகலா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT