தமிழ்நாடு

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை வெளியேறியது

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கல்லிங்கரை பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணி மூலம் புதன்கிழமை அதிகாலை வெளியேறியது.
கல்லிங்கரை பகுதியில் உணவு தேடி வந்த சிறுத்தை அங்குள்ள தனியார் தோட்டக் கிணற்றில் திங்கள்கிழமை இரவு தவறி விழுந்தது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்தச் சிறுத்தையை மீட்கும் முயற்சியாக கிணற்றுக்குள் ஏணியை வைத்தனர்.
மனிதர்கள் நடமாட்டம் காரணமாக அச்சிறுத்தை கிணற்றை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திய பின் வனத்துறையினர் சென்று விட்டனர்.
புதன்கிழமை அதிகாலை 1 மணி அளவில், கிணற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த ஏணி மூலம் அந்தச் சிறுத்தை வெளியேறியது. கிணற்றிலிருந்து சிறுத்தை வெளியேறும் இடத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். ஆனால், சிறுத்தை கூண்டுக்குள் செல்லாமல் வனத்துக்குள் சென்றுவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT