தமிழ்நாடு

ஜெயலலிதாவை 75 நாட்களில் ஒருநாள் கூட‌ சந்திக்கவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 75 நாட்களில் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்வர் அளித்த பிரத்யேக பேட்டியில், தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து கொண்டேதான் இருந்தேன். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகதான் ஜெயலலிதா நினைவிடம் சென்றேன்.

1977-இல் இருந்து அதிமுகவில் இருக்கின்றேன் எனக் கூறிய பன்னீர்செல்வம், 10 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா என்னை பொருளாளராக நியமித்தார். எனது பணியை நிறைவாக செய்திருக்கிறேன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது. அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் கடமையை மட்டுமே செய்தேன் எனக் கூறினார்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த 75 நாட்களும் மருத்துவமனைக்கு நான் சென்று வந்தேன். ஆனால், ஒருநாள் கூட என்னால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. சந்தேகத்திற்கிடமான கேள்வியை எழுப்ப எனது மனம் இடம் கொடுக்கவில்லை என்று பன்னீர்செல்வம் கூறினார்.

100 சதவீதத்தில் 10 சதவீதம் தான் கூறியிருக்கிறேன் என கூறிய பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் என் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. பதவியை காப்பாற்றுவதற்காகவே அமைச்சர்கள் பேசியுள்ளனர் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT