தமிழ்நாடு

3 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் முதல்வருக்கு ஆதரவு

DIN

சேலத்தில், 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் சேலம் கொண்டலாம்பட்டி பகுதி செயலராக எம்.சண்முகம் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், மனோகரன், மாணிக்கம், பெருமாள்சாமி, வட்டச் செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் பகுதி செயலர் எம்.சண்முகம் பேசுகையில், அதிமுக பொதுச் செயலராக வி.கே.சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் முதல்வரானால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்குக் கூட பெற முடியாது. ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை கொண்டலாம்பட்டி பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கொண்டலாம்பட்டி பகுதி செயலர் எம்.சண்முகம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜு, எஸ்.இ.வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், துணை மேயருமான மு.நடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னாள் மாவட்டச் செயலர்கள் பாலகிருஷ்ணன், நாகராஜன், அதிமுக வழக்குரைஞர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் அருள் புஷ்பராஜ், எம்ஜிஆர் மன்றச் செயலர் நெத்திமேடு முத்து, மாநகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், பாண்டியன், சொக்கலிங்கம், மணி, இளங்கோ, மாணிக்கம், பெரியசாமி, முருகன், சுப்பு, பரமசிவம், பாபு, லிங்கேஸ்வரன், ஸ்ரீதர் மற்றும் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை பகுதி வட்டச் செயலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பது எனவும், மேலும் ஓரிரு நாளில் சென்னை சென்று முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT