தமிழ்நாடு

சசிகலா துரோகியா... பன்னீர் துரோகியா?: விளக்கும் நாமக்கல் எம்.பி. பி.ஆர். சுந்தரம்

DIN

சென்னை: குடும்ப அரசியல் நடத்தும் சசிகலா தலைமை எங்களுக்கு வேண்டாம் என்று நாமக்கல் மக்களவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழல் நிலவு வரும் நிலையில், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரித்துள்ள நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் நான் மனதில் நினைத்ததை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவை வழிநடத்தும் திறமை பன்னீசெல்வத்திற்கே உள்ளது. தம்பிதுரை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பன்னீர்செல்வத்திற்கே ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினார்.
ஜெயலலிதா மறைந்த போது சசிகலா, 15 பேருடன் தான் வலம் வந்தார். ஜெயலலிதா இறப்பின்போது போது மருத்துவமனையில் சசிகலா சுடிதாரில் வந்தார். அப்போது, சசிகலா கண்ணீல் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. நாங்கள் எல்லாம் கண்ணீர்விட்டு அழுதபோது சசிகலாவுக்கு தம்பட்டம் அடிக்கும் தம்பிதுரை சீப்பு எடுத்து தலை சீவினார்.
ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூட்ஸ் காலுடன் தீபக் நின்றார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை சிபிஐ விசாரணை நடத்தி மக்கள் தெரியப்படுத்த வேண்டும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த இல்லம் நினைவு சின்னமாக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், குடும்ப அரசியல் தான் நடத்தவோம் என வெளிப்படையாகவே சசிகலாவின் நடராஜன் கூறுயுள்ளார். அவர் அப்படி கூறுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது. எனவே, குடும்ப அரசியல் நடத்தும் சசிகலா தலைமை எங்களுக்கு தேவையில்லை. சசிகலா - நடராஜன் திருமணம், யார் தலைமையில் நடந்தது. நீங்கள் துரோகியா அல்லது பன்னீர் துரோகியா? என்பது இதிலே தெரிந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT