தமிழ்நாடு

சசிகலா மீது கடும் அதிருப்தி: பன்னீர்செல்வம் அணிக்கு தாவுகிறார்கள் பொன்னையன்- நட்ராஜ்

DIN

சென்னை: சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பொன்னையன் திடீரென சசிகலா மீது ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தியால் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் செய்தித் தொடர்பாளகான சி. பொன்னையன் தற்போது திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தியாளர்களிடம் அதிகமாக பேசியவர் பொன்னையன். ஜெயலலிதா திடீரென மறைந்த போது ஊடகங்களால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்

பின்னர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா எனவும் அதற்கு ஆதரமாக ஸ்ரீராம் சிட்பண்ட் தொடங்கப்பட்டுள்ள கணக்கில் நாமினியாக சசிகலாவை ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார் என அதற்கான பேப்பரை காட்டியும் சர்ச்சையில் கிளப்பியவர் பொன்னையன்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத் தலைவராக இருந்து வந்த மதுசூதன் திடீரென முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து மதுசூதனன் நீக்கப்பட்டு புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு அவைத் தலைவர் பதவி தமக்கு கிடைக்கும் என காத்திருந்த பொன்னையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவிக்க பொன்னையன் முடிவு செய்துள்ளதாகவும். இதற்காக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க பொன்னையன் இன்று செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

இவரைத்தொடர்ந்து, மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT