தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி தள்ளிப்போகிறதா?

DIN

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அவருக்கும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.

கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது . மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளநிலையில் வருகின்ற திங்கள் கிழமை (13.02.17) அன்று தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில், தீர்ப்பு வழங்க உள்ள நீதிபதி அமித்வா ராய் அன்று விடுமுறை என்பதால் செவ்வாய்க்கிழமை அல்லது அதற்கு மறுநாள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சியில் அமர்வது யார்? என்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் மாநில அரசியலில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தேதி தள்ளிப்போவது சசிகலாவின் ஆதரவு அதிமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT