தமிழ்நாடு

பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு: காங்கிரஸ் கண்டனம்

DIN

பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் 2018-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் குழுவுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 552 பொறியியல் கல்லூரிகளில் 1.52 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி 13,625 பேர் படிக்கின்றனர். ஆனால், மாநில பாடத்திட்டத்தின்படி 8,33,682 மாணவர்கள் படிக்கின்றனர்.
நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி, 8 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவர். இதில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
அந்த வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாத நிலையில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே, நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT