தமிழ்நாடு

செய்தியாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

கூவத்தூரில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட செய்தியாளர்கள் ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், செய்தி சேகரிப்பதற்காக மாவட்டச் செய்தியாளர்கள் அங்கு சென்றனர். அவர்களை அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் தாக்கி விரட்டியுள்ளனர். இதில் சில செய்தியாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்ட செய்தியாளர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி, மாவட்ட எஸ்பி முத்தரசி ஆகியோரைச் சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர். அதில், செய்தி சேகரிக்கச் சென்ற தங்களைத் தாக்கிய நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT