தமிழ்நாடு

கூவத்தூர்  செல்லும் வழியில் பாதியில் திரும்பிய பாண்டியராஜன்! 

DIN

சென்னை: கூவத்தூர் உல்லாச விடுதியில் தங்க  வைக்கப்பட்டுள்ள  அதிமுக எம்.எல் .ஏக்களை சந்திப்பதற்காக சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பாதி வழியில் திரும்பினார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூவத்தூர் உல்லாச விடுதியில் தங்க  வைக்கப்பட்டுள்ள  அதிமுக எம்.எல் .ஏக்களை சந்திப்பதற்காக புறப்பட்டார். ஆனால் கோவளம் அருகே காவல்துறையினரால் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கூவத்தூரில் அசாதாரண சூழல் நிலவுவதால் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்க அவரது வாகனம் தடுத்து நிறுத்தபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT