தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: என்ன நடக்கும்?

DIN


புது தில்லி: அதிமுக பொதுச் செயலர் சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

இந்த தீர்ப்பில், என்னவெல்லாம் ஆகலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

அதாவது, தீர்ப்பளிக்கும் 2 நீதிபதிகளுமே சசிகலாவை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கலாம். அவ்வாறு நடந்தால், சசிகலாவின் அரசியல் வாழ்க்கை என்பது முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது.

அதே சமயம், ஒரு நீதிபதி குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து, மற்றொருவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்லும்.

அதில்லாமல், மேலும் ஒரு வாய்ப்பு நீதிபதிகளுக்கு உள்ளது. அதாவது, இந்த வழக்கில் முக்கியமாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது மரணம் அடைந்துவிட்டதால், புதிதாக இந்த வழக்கை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்துக்கோ அல்லது சிறப்பு நீதிமன்றத்துக்கோ பரிந்துரைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT