தமிழ்நாடு

முதல்வருக்கு ஆதரவளித்த  நிர்வாகிகள் கட்சியிலிருந்து கூண்டோடு நீக்கம்!

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்   நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி உள்ளிட்ட 18 பேரை கட்சியிலிருது நீக்கி... 

DIN

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்   நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி உள்ளிட்ட 18 பேரை கட்சியிலிருது நீக்கி பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

கட்டாயப்படுத்தி தன்னை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று முதல்வர் பன்னீர்செல்வம்  அளித்த பரபரப்பான பேட்டியைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.

பின்னர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவளிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும்  அடக்கம்.

இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்   நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி உள்ளிட்ட 18 பேரை கட்சியிலிருது நீக்கி பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் அதே நேரம் அவருக்கு ஆதரவளித்த அதிமுக எம்பிக்கள் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT