தமிழ்நாடு

சசிகலா இளவரசி இருவரும் பரப்பன அக்ரஹாரா  சிறையில் அடைப்பு !

DIN

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார  சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அத்துடன் அவர் பெங்களூரு நீதிமன்ற 48-ஆம் எண் அறையில் ஆஜராக வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டார். பின்னர் அது பாதுகாப்பு காரணங்களுக்காக பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்பு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.   

அதன் காரணமாக இன்று காலை போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார்.அவருடன் இளவரசியும் புறப்பட்டார். அங்கிருந்து நேராக கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் அங்கிருந்து நேராக பெங்களூரு சென்றனர்

மாலை 05.30 மணியளவில் பெங்களூரு சிறை வளாகத்தை அடைந்தனர்.  அங்கிருந்த நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்பு சசிகலா மற்றும் இளவரசி  சரண் அடைந்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அதே சமயத்தில் சசிகலாவுக்கு உடை மற்றும் மருந்துகள்  கொண்டு வந்திருந்த தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார்கள் மீது அங்கிருந்த சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

சசிகலா மற்றும் இளவரசிக்கு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் முறையே 10711, 10712 ஆகிய எண்கள் ஒதுக்கப்படலாம் எனத்  தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT