தமிழ்நாடு

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

DIN

ஆலம்பரை கோட்டை அருகே உள்ள சிறு தீவுக்குச் செல்வதற்காக கடல் நீரைக் கடக்க முயன்றபோது மாயமான 3 மாணவர்களின் சடலங்கள் மரக்காணம் அருகே மீட்கப்பட்டன.
இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலம்பரை கோட்டையை சுற்றிப் பார்க்க புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கடந்த 13-ஆம் தேதி வந்தனர்.
இதில், மதகடிப்பட்டு காமராஜ் மகன் ஆயஸ் (21), ரெட்டியார்பாளையம் ஜோதிகுமார் மகன் கௌதம்பிள்ளை (21), காலாபட்டு குமார் மகன் பாலசந்தர் (21) ஆகியோர் கோட்டை அருகே உள்ள சிறுதீவுக்குச் செல்ல கடல்நீரைக் கடக்க முயன்றனர். இதில், அவர்கள் 3 பேரும் கடலில் மூழ்கி மாயமாகினர்.
இதுகுறித்து தகவலறிந்த சூனாம்பேடு போலீஸார் அங்கு வந்து இரு நாள்களாக மாணவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், அஜய், கௌதம்பிள்ளை ஆகிய இருவரின் சடலங்களும் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே புதன்கிழமை மாலை கரை ஒதுங்கின. இந்நிலையில், அதேபகுதியில் பாலசந்தரின் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதையடுத்து, 3 சடலங்களையும் போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைத்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT